ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (19:15 IST)

டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ.. இரு அணிகளில் விளையாடுபவர்கள் யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை லக்னோ நான்கு போட்டிகளில் விளையாடிய அதில் மூன்றில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் டெல்லி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
டெல்லி: பிரித்வி ஷா, வார்னர், ஹோப், ரிஷப் பண்ட், ஸ்டப்ஸ், அக்சர் பட்டேல், ஜேக் பிராசர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மா, கலீல் அகமது, 
 
லக்னோ: டீகாக், கேஎல் ராகுல், படிக்கல், ஸ்டோனிஸ், பூரன், ஆயுஷ் படோனி, க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னாய், யாஷ் தாகூர், நவீன் உல் ஹக், அர்ஷத் கான், 
 
 
Edited by Siva