வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (14:11 IST)

டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க சதி..! ஜனாதிபதி ஆட்சி.? அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Delhi Minister
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  
 
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடந்து வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தன்னிடம் கூறியதாகவும்,  எனவே தான் எந்த ஆதாரமும் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார். 
 
கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களை யோசித்துப் பார்க்கும்போது சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது என்றும் டெல்லியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் காலியாக இருந்தும் பல மாதங்களாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
 
டெல்லிக்குள் அதிகாரிகள் இடமாற்றமும் இல்லை இன்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

 
மேலும்  அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் பாஜகவின் சதியின் ஒரு பகுதியே என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.