புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:43 IST)

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரரின் பதக்கம் பறிப்பு

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா இதுவரை  7 தங்கம்,  10 வெள்ளி,  19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்கள் பெற்று புள்ளி பட்டியலில் 9 இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும் ஜப்பான், கொரியா, ஈரான் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களிலும் உள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன் மிக அபாரமாக ஓடி வெண்கல பதக்கம் வென்றார்.. ஆனால் பதக்கம் பெற்ற சில் நிமிடங்களில் அவரது பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  கோவிந்தன் லக்‌ஷ்மனன் தனக்கான வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவரது வெண்கல பதக்கம் பறிபோனது.
 
இதனையடுத்து 4வது இடம் பிடித்த சீனாவின் ஜோ சாங்க்ஹாங் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவிந்தன் லக்‌ஷ்மணன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தடகள சம்மேளனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது