1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 ஆகஸ்ட் 2018 (21:35 IST)

ஆசிய விளையாட்டு தொடக்க விழா; பைக்கில் அசத்திய இந்தோனேசிய அதிபர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு இந்தோனேசிய அதிபர் பைக்கில் வந்து அசத்தினார்.

 
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடக்க உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. விழா தொடங்கும் முன் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் அரங்கிற்குள் நுழைந்தார்.
 
பின்னர் அது இந்தோனேசியா அதிபர் என்று தெரிந்ததும் அரங்கமே அதிர்ந்தது. யார் எதிர்பார்க்காத வகையில் இருந்த இவரது வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
 
இந்த வியப்போடு தொடக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 1500 பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நடனம் நடைபெற்றது.