இங்கிலாந்து நிதியமைச்சர் திடீர் ராஜினாமா: போரிஸ் ஜான்சன் மீது அதிருப்தியா?
இங்கிலாந்து நிதியமைச்சர் திடீர் ராஜினாமா: போரிஸ் ஜான்சன் மீது அதிருப்தியா?
இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்பாடுகள் அதிர்ச்சி அடைய வைப்பதாக ஏற்கனவே நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்பட ஒரு சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்ததால் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து புதிய நிதியமைச்சர் இன்று அல்லது நாளைக்குள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்பாடுகள் மேலும் சில அமைச்சர்களை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால் மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.