1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (09:24 IST)

இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் பேச்சு! – இங்கிலாந்து டெஸ்ட்டில் பரபரப்பு!

India Test
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர்களை இனவெறியோடு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையே ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா விளையாடாத நிலையில் ஜாஸ்பிரித் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்களை மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை ஏற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.