இதற்கெல்லாம் என்னால் விளக்கம் சொல்ல முடியாது – தோனியை வறுத்தெடுத்த கங்குலி !

Last Modified திங்கள், 1 ஜூலை 2019 (10:57 IST)
இந்திய அணி நேற்று இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததை அடுத்து தோனி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற கிரீடத்துடன் வலம் வந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்திடம் மண்ணைக்கவ்வியுள்ளது. இந்திய அணி வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் தோல்வியடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிலும் குறிப்பாக தோனியின் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இறுதி ஓவர்களில் ரன்ரேட் விகிதம் 12 க்கு மேல் இருக்கும்போது தோனியும் கேதார் ஜாதவ்வும் சிங்கிள்ஸ்களாக பொறுக்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அப்போது வர்ணனைன் செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் கேப்டன் கங்குலியும் தோனியையும் ஜாதவ்வையும் வறுத்தெடுத்தார்.

ஆமைவேக ஆட்டத்தால் கோபமான கங்குலி ‘ தோனி 100 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் அவரது ஆட்டம் போட்டிக்குள் இல்லை. இவ்வளவுப் பெரிய ரன்னை சேஸ் செய்யும் போது கையில் 5 விக்கெட்டுகள் இருக்கும்போது சிங்கிள்கள் ஆடுவது ஏன் ?... ’ எனக் கூறினார். ஒவ்வொரு முறை சிங்கிள்ஸ் எடுக்கும் போது கடுப்பான அவர் கடைசியாக தோனி எடுத்த ஒரு சிங்கிளின் போது ‘ இதற்கெல்லாம் என்னால் விளக்கம் கொடுக்க முடியாது’ எனக் கோபமாகக் கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :