ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை – பனிதீர்க்குமா நியுசிலாந்து !

Last Modified சனி, 29 ஜூன் 2019 (12:19 IST)
உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

உலகக்கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இரு அணிகளுமே இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்துக்குள் வந்துள்ளன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸி. 6 போட்டிகளில் வென்று அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ள ஒரே அணியாக உள்ளது. நியுசிலாந்து அணி 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அரையிறுதிக்கு தகுதிப்பெற இந்தப் போட்டியில் வெல்ல வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பைகளில் 10 முறை மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா  7 முறையும் நியுசிலாந்து 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸி அணி நியுசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் அதற்குப் பழிதீர்க்கும் உத்வேகத்தில் உள்ளது நியுசிலாந்து அணி. இந்த போட்டி இன்று மாலை மூன்று மணிக்குத் தொடங்க இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :