புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (16:19 IST)

விராட் கோஹ்லியை வீழ்த்தியே தீருவேன் – சபதமெடுத்த இங்கிலாந்து வீரர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கிட்டதட்ட அரையிறுதியை நெருங்கிவிட்டன. இதுவரை 6 போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்மூலம் உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் நாளை இங்கிலாந்தும், இந்தியாவும் மோதும் ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா அளவிற்கு இங்கிலாந்தும் பலமான அணியே. ரசிகர்கள் இருவருக்கிடையிலான ஆட்டத்தை ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மோயீன் அலி “கோஹ்லியை வீழ்த்தியே தீருவேன்” என சபதமெடுத்துள்ளார்.

ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “விராட் கோஹ்லிதான் இந்தியாவின் ரன் மெஷின். அவரை போன்ற ஒரு ஆட்டநாயகனை வீழ்த்த ஆழலுடன் காத்திருக்கிறேன். நாளை நடைபெறும் ஆட்டத்தில் அவரை கண்டிப்பாக வீழ்த்துவேன்” என கூறியுள்ளார்.

இதுவரை ஐபிஎல், டி20 என அனைத்து ஆட்டங்களையும் சேர்த்து 6 தடவை மோயீன் அலி விராட் கோஹ்லியை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.