செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:32 IST)

விளையாட்டின் சிறப்பே இதுதான்… விராட் கோலி பகிர்ந்த புகைப்படம்!

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி டிவில்லியர்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதுகுறித்து மகிழ்ச்சியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. கடைசியாக மும்பை அணியுடனான போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி. அந்த சூப்பர் ஓவரில் கோலியும் டிவில்லியர்ஸும் களமிறங்கியிருந்தனர். இந்நிலையில் டிவிட்டரில் கோலி தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விளையாட்டின் சிறப்பு என்னவென்றால் நட்புணர்வும் சக வீரர்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையும்தான். விளையாட்டு அழகானது’ எனக் கூறியுள்ளார்.