1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Kohli lagging in test ranking

ஐசிசி டெஸ்ட் தரவரிசை… 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட கோலி!

முகமது சிராஜ்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியுசி கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்த இடத்தில் ஸ்மித் இருக்க சென்னை டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் முன்னணி இடத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் ஆஸிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்தை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்: கோலி பேட்டி!!