செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (13:29 IST)

இங்கிலாந்தை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்: கோலி பேட்டி!!

இங்கிலாந்தின் ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என முதல் போட்டிக்கு பின் கோலி போட்டியளித்துள்ளார். 

 
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின்னர் கோலி பின்வருமாறு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, முதல்பாதியில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை. சில ரன்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். 
 
ஏற்கனவே சொன்னது போல் ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்து விட்டனர். இந்த டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட பந்தின் தரம் திருப்திகரமாக இல்லை. 
 
ஒரு டெஸ்ட் அணியாக இதற்கு முன்பு இத்தகைய அனுபவத்தை சந்தித்ததில்லை. இருப்பினும் தோல்விக்கு இதை காரணமாக சொல்லமாட்டேன். எங்களை விட இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது என்பதே உண்மை. வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி என தெரிவித்தார்.