கொரோனாவை எதிர்த்து...சீன பெண்ணை திருமணம் செய்த இளைஞர் !

mashyapradesh
sinoj kiyan| Last Modified திங்கள், 3 பிப்ரவரி 2020 (13:45 IST)
சீனா நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்வேறு நாடுகள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சீன மக்களின் மருத்து சிகிச்சைக்கான சீன அரசு 9 நாட்களில் பிரமாண்ட மருத்துவமனை கட்டி எழுப்பியுள்ளது. 
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகள் மற்றும் மாணவர்கள்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், சீனா நாட்டைச் சேர்ந்த தனது காதலியை  இந்திய  இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்ஸரை சேர்ந்த இளைஞர் சத்யார்த், சீனாவை சேர்ந்த ஷிகா இருவரும் கனடா நாட்டில் ஒன்றாகப் படிக்கும்போது காதலித்து வந்தனர். இருவரது வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய நிலையில், ஷிகாவின் குடும்பத்தினர் கடந்த புதன் கிழமை  மாண்ட்ஸர் வந்து சேர்ந்து திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
 
அதேசமயம் மணம்பெண் மற்றும் அவரது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதாக என தீவிரமாக் கண்காணிக்கப்பட்டது. ஆனால் அவர்களது உறவினர்களுக்கு விசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :