நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ஷிவம் துபேவும் ஒரு காரணம் – எப்படி தெரியுமா ?

Last Modified திங்கள், 3 பிப்ரவரி 2020 (08:04 IST)
ஷிவம் துபே ஒரேயொரு ஓவர் வீசியதால்தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது என நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்திய நியுசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியையும் வென்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் 163 ரன்களுக்குள் நியுசிலாந்தை சுருட்டி சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கோலி, ரோஹித் போன்றவர்கள் களத்தில் இல்லாமல் ராகுலின் கேப்டன்சியில்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் வென்றதற்குக் காரணம் ரோஹித்தின் அதிரடி, பூம்ராவின் துல்லிய பந்துவீச்சு எனப் பலர் காரணங்களை சொன்னாலும் ஷிவம் துபேதான் முக்கியக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டியின் 10 ஆவது ஓவரை வீசிய ஷிவம் துபே.  பவுண்டரிகளும் சிக்சர்களுமாக வழங்கி அந்த ஓவரில் மட்டும் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு அவருக்கு ஓவர் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை அவருக்கு இன்னும் ஒரு ஓவர் வீசியிருந்தால் வெற்றி நியுசிலாந்தின் கைகளில் இருந்திருக்கும். அதனால் ஒரே ஒரு ஓவரோடு நிறுத்திக்கொண்ட ஷிவம் துபேவும் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணம் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :