புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (16:13 IST)

5வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி: வாஷ் அவுட் ஆனது நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்று நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் ஆக்கியுள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதனால் 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 163/3  20 ஓவர்கள்
 
ரோஹித் சர்மா: 60
கே.எல்.ராகுல்: 45
ஸ்ரேயாஸ் அய்யர்: 33
 
நியூசிலாந்து: 156/9  20 ஓவர்கள்
 
டெய்லர்: 53
செய்ப்ரிட்: 50
ஷோதி: 16
முன்ரோ: 15
 
இந்திய அணியின் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும், சயினி, தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்