தொடர்புடைய செய்திகள்
- விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!
- ’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!
- மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவானாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி… ரவி மோகனுக்கு நீதிமன்றம் அவகாசம்!
- மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்! ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி!
- விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!
நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், தற்போது அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஆர் சி பி அணி கொல்கத்தாவுடன் விளையாட இருந்த போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆர் சி பி அணி 17 புள்ளிகளோடு ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர் சி பி அணியில் இடம்பெற்றுள்ள ஜேக்கப் பீத்தல் சர்வதேச தொடருக்காக இங்கிலாந்து திரும்பியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நியுசிலாந்து அணியின் டிம் செய்ஃபர்ட்டைத் தற்காலிக வீரராக ஆர் சி பி நிர்வாகம் வாங்கியுள்ளது.