பாரபட்சமாக ஊக்கப் பரிசு....காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, வாயில்கூட்டம்
காகித ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊக்கப் பரிசுகளை பாரபட்சமாக வழங்கும் காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, ஆலையின் நுழைவாயில் முன்பு வாயில்கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி புகழூர் நகராட்சி காகிதபுரம் TNPL காகிதஆலை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இந்த ஆண்டு காகித ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊக்கப் பரிசுகளை பாரபட்சமாக வழங்கும் காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, ஆலையின் நுழைவாயில் முன்பு வாயில்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் Er.திரு.K.கமலக்கண்ணன் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர்.
Edited by Sinoj