கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்குதல்: 2 பேர் பரிதாப பலி, 17 பேர் படுகாயம்
ஒடிசா மாநிலத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஒரிசா மாநிலத்தில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து வந்தனர்
அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் தாக்கியது. இந்த மின்னல் காரணமாக கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் பலியானதாகவும் 21 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran