1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (10:44 IST)

ஒமிக்ரான் எதிரொலி: 3வது தவணை தடுப்பூசிக்கு கெடு விதித்த நாடு!

இம்மாத இறுதிக்குள் மக்கள் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார். 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் வைரஸால் பிரிட்டனில் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் ஏற்பட்ட முதல் இறப்பாக பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் மக்கள் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பிரிட்டன் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். 
 
மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இதுவரை பூஸ்டர் தடுப்பூசிக்கு அவசியம் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு பைசர் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 70% பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.