1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (13:47 IST)

ஆமை வேகத்தில் நகரும் ஆஸி அணி… ஆஷஸ் அப்டேட்!

ஆமை வேகத்தில் நகரும் ஆஸி அணி… ஆஷஸ் அப்டேட்!
அடிலெய்டில் தொடங்கி நடந்து வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆஸி அணி பேட் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பிர்ஸ்பேனில் நடந்த முதல் போட்டியை ஆஸி அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று அடிலெய்டில் இரண்டாம் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட் செய்ய முடிவு செய்த ஆஸி அணி ஆமைவேகத்தில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் மற்றும் பிராட் பந்துவீச்சு இணை இந்த போட்டியில் களமிறங்கியுள்ளதால் பந்துவீச்சு பலமடைந்துள்ளது. இதுவரை 40 ஓவர்களை சந்தித்துள்ள ஆஸி அணி 85 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் வார்னர் 50 ரன்களோடு, மார்னஸ் லபுஷான் 25 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.