ஜப்பானில் டெல்டா வேரியண்ட்; டோக்கியோவில் அவசரநிலை! – ஒலிம்பிக் போட்டி என்னவாகும்?
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டே நடைபெற இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூலை 23 முதல் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜப்பானில் கொரோனா திரிபான டெல்டா வகை பரவல் அதிகரித்துள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர நிலை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது.