1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The new Corona shocked people

புதுவகை கொரொனா....மக்கள் அதிர்ச்சி

டெல்டா வகை
இந்தியாவில் பரவிவரும் புதிய வகைக் கொரொனாவால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்டா வகை கொரொனா வைரஸைவிட லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் கொடியது என தகவல் வெளியாகிறது. மேலும்,  3 வது அலை கொரொனா வரவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது,லாம்டா வந்திருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
Audi A6 சொகுசு காரா? இல்லையா? இணையதளத்தில் டிரெண்டிங்