பெண்ணுக்கு மூக்கில் குத்துவிட்ட நபர் – டோல் கேட்டில் பரபரப்பு சம்பவம்

cctv
Last Modified வெள்ளி, 21 ஜூன் 2019 (16:00 IST)
ஹரியானாவில் உள்ள சுங்க சாவடியில் பணிபுரிந்த பெண்ணை பயணி ஒருவர் மூக்கில் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் குருக்ரம் என்னும் பகுதியில் அமைந்துள்ள சுங்க சாவடியில் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இது சுங்க சாவடியினுள் அமர்ந்திருந்த பெண்ணை பயணி ஒருவர் ஓங்கி மூக்கிலேயே குத்தினார்.

அந்த பெண்ணுக்கு மூக்கு உடைந்து பொலபொலவென ரத்தம் கொட்டியது. அருகிலிருந்த மற்றொரு பெண் மற்றும் சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மூக்கை உடைத்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். மூக்கு உடைந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :