செல்ஃபி எடுத்த இளைஞர் தட்டிவிட்ட முதலமைச்சர்! இதெல்லாம் நாங்க எப்பவோ பார்த்தாச்சு!

Last Updated: வியாழன், 6 ஜூன் 2019 (17:33 IST)
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

எங்கு பார்த்தாலும் செல்ஃபி செல்ஃபி  என செல்ஃபி  மோகம் பிடித்த மக்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. ஆபத்தான இடம் , துக்கம் அனுசரிக்கும் இடம் என எங்கு பார்த்தாலும் இங்கீதம் இன்றி ஆளாளுக்கு செல்ஃபி  எடுத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
 
அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணவிழாவிவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது அதே பாணியில் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு தன்னை நோக்கி வந்த  இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த  மனோகர் லால் அந்த இளைஞனின் கையைப் பிடித்து ஓரமாக இழுத்துவிட்ட அவர் முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :