ஐ.எஸ்.எல் கால்பந்து: அப்பாடா! சென்னைக்கு கிடைத்த முதல் வெற்றி

Last Updated: திங்கள், 25 நவம்பர் 2019 (21:43 IST)
 
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் படுமோசமாக விளையாடி வந்த சென்னையின் எப்.சி அணி, தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்தது
 
இன்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடியதால் தலா ஒரு கோல் போட்டனர். இதனையடுத்து ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி மீண்டும் ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது
 
சென்னை அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் இரண்டு போட்டிகளை டிரா செய்துள்ள நிலையில் இன்று முதல் வெற்றி கிடைத்துள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது
 
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து இதுவரை 10வது இடத்தில் இருந்த சென்னை அணி தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, கோவா, நார்த் ஈஸ்ட் யூனிடெட், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :