செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (08:59 IST)

சிசிடிவி கேமராக்களில் கைவைக்கும் மர்மமனிதன் – ஜட்டியுடன் உலா !

சென்னையில் உள்ள போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை திருப்பும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள போரூர் பகுதியில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் திசை மாற்றப்பட்டு இருப்பதாக போலிஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இது சம்மந்தமாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது ஜட்டி மற்றும் பனியன் அணிந்த ஒருவன் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கேமராக்களை திசைமாற்றி வைப்பது கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. முகத்தை மறைத்து இருப்பதால் அவர் யாரென அடையாளம் காணமுடியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை அடிப்பதற்காக வீடுகளை நோட்டமிடுவதற்காக அவர் இதுபோல் செய்திருக்கலாம் அல்லது ஏதேனும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் கவனமாக இருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் சந்தேகத்துக்கு இடமாக உலாத்துவோரை பற்றி போலிஸாருக்கு தகவல் சொல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.