டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா ? – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு !

Last Modified வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:56 IST)

ஆஸ்திரேலிய அணியின் வேகபப்ந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தனது துல்லியமான தாக்குதலால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலை குலையச் செய்பவர். இப்போது அவர் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அவர் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறும் யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் பேசிய அவர் ‘அனைத்து விதமான போட்டிகளிலும் தற்போது விளையாடி வருகிறேன். ஆனால் வெள்ளைப்பந்து ( ஒரு நாள் மற்றும் டி 20) போட்டிகள் எளிதானது. அதனால் அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். உடல் நான்கு ஓவர்கள் வீசுவதை மட்டுமே விரும்புகிறேன்.’ என சொல்லியுள்ளார்.

இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் விரைவில் ஒய்வு பெறக்கூடும் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :