செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (06:41 IST)

டெஸ்ட் போட்டிகளில் 100 ஆவது வெற்றி – நியுசிலாந்து அணி சாதனை !

இந்தியாவுடனான வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் நியுசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் 100 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா நான்காம் நாள் தொடக்கத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த வெற்றி நியுசிலாந்து அணிக்கு 100 ஆவது டெஸ்ட் வெற்றியாகும். இதுவரை 441 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியுசிலாந்து இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது அணியாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த சாதனையை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.