செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2020 (15:50 IST)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்... இந்திய அணி ஜெயிக்குமா ?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்... இந்திய அணி ஜெயிக்குமா ?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்தியா - நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரின் நடைபெற்று வருகின்றது.  இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இந்திய வீரர் ரஹானே 46 ரன்கள்  அதிகபட்சமாக எடுத்து ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சார்பில்  ஜேமிசன் மற்றும் சௌதி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
நியூசிலாந்து அணியில் தொடக்கநிலை ஆட்டக்காரராக களமிறங்கிய டாம் லேதம் என்பவர் 11 ரன்கள்  எடுத்து அவுட் ஆனார்.
 
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்த டெய்லர் தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள்  சேர்ந்தது. 
 
இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது நியூசிலாந்து இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ஏற்கனவே ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட இந்திய அணி டெஸ்ட் போட்டியில் திறமையாக பேட்டிங்செய்தால் தோல்வியை தவிர்க்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.