2வது இன்னிங்ஸிலும் சொதப்பல்: படுதோல்வி அடைந்த இந்தியா!

2வது இன்னிங்ஸிலும் சொதப்பல்: படுதோல்வி அடைந்த இந்தியா!
2வது இன்னிங்ஸிலும் சொதப்பல்: படுதோல்வி அடைந்த இந்தியா!
Last Modified திங்கள், 24 பிப்ரவரி 2020 (05:52 IST)
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் டி20 தொடரை இந்தியாவும் ஒரு நாள் தொடரை நியூசிலாந்தும் கைப்பற்றிய நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது

இந்த போட்டியின் நான்காவது நாளான இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதனை அடுத்து இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணிக்கு தோல்வி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தினர் என்பதும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகும்

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் 165/10

ரஹானே: 46
மயாங்க் அகர்வால்: 34
முகம்மது ஷமி: 21
ரிஷப் பண்ட்: 19

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்: 348/10

வில்லியம்சன்: 89
டெய்லர்: 44
ஜேமிசன்: 44
கிராந்தோம்: 43

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 191/10

மயாங்க் அகர்வால்: 58
ரஹானே: 29
ரிஷப் பண்ட்: 25
விராத் கோஹ்லி: 19

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 9/0

லாதம்: 7
பிளண்டல்: 2

ஆட்டநாயகன்: ஜேமிசன்இதில் மேலும் படிக்கவும் :