ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (10:57 IST)

தொடர் தோல்வி… பவுண்டரி அளவைக் குறைக்க சொன்னதா சிஎஸ்கே!

துபாயில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் மோசமாக ஆடிவரும் சென்னை அணி குறித்த செய்தி ஒன்று பரவி வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கிய சென்னை அணி அதற்கு அடுத்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 ல் தோல்வி அடைந்துள்ளதால் பிளே ஆஃப் வாய்ப்பு மங்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தொடர் தோல்வி காரணமாக ஐபிஎல் நிர்வாகக் கவுன்சிலிடம் பவுண்டரிகளின் அளவைக் குறைக்க சொல்லி சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிஎஸ்கே அணி குறித்த மீம்ஸ்களும் ட்ரோல்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.