புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (08:58 IST)

#ziva: தோனிக்கு ஆதரவாக வைரல் ஹேஷ்டேக்!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ziva என்ற ஆதரவு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாகப் பல திருப்பு முனைகள் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கும் ஏன் அணிகளுக்குமே அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்ச் தினமும் த்ரில்லாக போய்க்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் இம்முறை அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது. சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்காக முன்னாள் வீரர் சேவாக் சென்னை அணியைக் கடுமையாய் விமர்சித்துள்ளார். 
 
மேலும், சென்னை அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால், தோல்வி அடையும்போது, மோசமாக விளையாடும் போதும் தோனியின் குடும்பத்தை விமர்சித்தும், கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுக்கு ( 5 வயது ) சோசியல் மீடியாவில் பாலத்கார மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ள தோனி ரசிகர்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு கண்டம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ziva என்ற ஆதரவு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.