திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (20:17 IST)

சென்னை அணி தொடர் தோல்வி... கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல்...

சென்னை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாகப் பல திருப்பு முனைகள் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கும் ஏன் அணிகளுக்குமே அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்ச் தினமும் த்ரில்லாக போய்க்கொண்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது.  சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக் சென்னை அணியைக் கடுமையாய் விமர்சித்துள்ளார். அதில் சமீபத்திய போடியில் சென்னை அணி ஜெயித்திருக்கலாம் ஆனல ஜடேஜா மற்றும் ஜாதவின் மந்தமான ஆட்டத்தால் அணி தோற்றது. சென்னை அணி வீரர்கள் அணிக்காக விளையாடுவது.

அரசுவேலை போலக் கருதுகிறார்கள். விளையாடாவிட்டாலும் அவர்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்று கருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சென்னை அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால், தோல்வி அடையும்போது, மோசமாக விளையாடும் போதும் தோனியின் குடும்பத்தை விமர்சித்தும், கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுக்கு ( 5 வயது )  சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி  அடைந்து, இதுபோன்ற மிரட்டல்களுக்கு கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கோலியின் மனைவிக்கு இதேபோல் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.