வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (09:00 IST)

மைதானத்தை உலரவைக்க அயர்ன்பாக்ஸ் & ஹேர் டிரையர் – கிண்டலுக்கு உள்ளான புகைப்படம் !

மைதானத்தை உலரவைக்க அயர்ன் பாக்ஸைப் பயன்படுத்தியதால் பிசிசிஐ நிர்வாகத்தைப் பலரும் கேலி செய்துள்ளனர்.

இலஙகை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முதல் டி 20போட்டி, கவுகாத்தியில் இரு தினங்களுக்கு முன்பாக நடக்க  இருந்தது. ஆனால் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்னதாக மழைப் பெய்ய ஆரம்பித்ததால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதற்கிடையில் மைதானத்தின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக நடுவர் அறிவித்தபோது கிரீஸை உலர்த்த ஆடுகள நிர்வாகிகள் அயர்ன்பாக்ஸ், ஹேர் டிரையர் மற்றும் சிறிய வேக்கம் க்ளீனர் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ –இடம் கிரவுண்ட்டை உலர்த்தவென ஒரு நவீனக் கருவி கூட இல்லையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.