திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (19:04 IST)

ஒரே ஓவர்; ஐந்து சிக்ஸ்; வெளுத்து கட்டிய டாம் பாண்டன்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் வெளுத்து கட்டி அசத்தியுள்ளார் இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் பாண்டன்

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பான் ஹீட் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக 8 ஓவராக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பான் அணியில் டாம் பாண்டன் மற்றும் கிறிஸ் லின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் டாம் பாண்டன், அர்ஜூன் நாயரின் ஓவரில், 6 பந்துகளில் ஐந்து பந்துகளை சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதேயான டாம் பாண்டனை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்-ல் ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.