1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (16:34 IST)

யுவராஜ் சிங் போன்று 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசிய வீரர் ! வைரல் வீடியோ

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் லியோ கார்ட்டர் என்ற வீரர்  6பந்தில்  6 சிக்ஸர் அடித்து  வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
 
அதேபோல் நியூசிலாந்து சூப்பர் ஸ்மாஷ் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் காண்டர்பெரி கிங்ஸ் - நார்தர்ன் நைட்ஸ் அணிகள் மோதின.
 
இதில், காண்டர்பெர்ரி அணியின் இடது கை பேட்ஸ்மேனான லியோ கார்ட்டர் என்பவர், எதிரணி வீரர் ஆண்டன் டேவ்சிஸ் வீசிய ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்சருக்கு அடித்தார்.
 
அதன்மூலம் 6 பந்துகளுக்கு ஆறு சிக்சர்கள் அடித்த வீரர்களின் வரிசையில் யுவராஜ் சிங், கிப்ஸ் ஆகியோருடம் வரிசையில் இடம் பிடித்தார் லியோ. மேலும் இந்த சாதனையைப் படைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.