இந்தியாவின் இளம் புயலுக்கு வாய்ப்பளித்த கொல்கத்தா அணி
U19 ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோட்டியை கொல்கத்தா அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு ஏலம் போனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல மூத்த வீரர்களை விட இளம் வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
யாரும் ஆர்வம் காட்டாத அதிரடி மன்னன் கிரிஸ் கெய்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து ஆதரவு தந்துள்ளது. சென்னை அணியில் விளையாடி வந்த அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிக்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் U19 ஜூனியர் உலக கோப்பை அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோட்டியை கொல்கத்தா அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜூனியர் உலக கோப்பை போட்டியில் அணியில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியாவின் சிறப்பான ஆட்டத்திற்கு கம்லேஷ் நாகர்கோட்டியும் காரணமாய் விளங்கி வருகிறார். 140கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இவர் அடுத்து சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்புள்ளது.