ஐபிஎல் ஏலம் - கோடிகளில் புரளும் வீரர்கள்
2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள வீரர்களை தேர்ந்தெடுக்க பெங்களூரில் தற்போது ஏலம் நடைபெற்று வருகிறது.
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார். இவரை ராஜாஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் இவர்தான். அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கவுதம் கம்பீரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து ஒரே அணியில் விளையாடி வந்த சில பிரபல வீரர்கள் தற்போது வேறு அணிக்கு சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே உள்ளிட்ட சில இளம்வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களை பல அணிகள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றிலே பிரபலம் ஆகாத வீரர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை. குருநல் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் விடாமல் ரூ.8.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது நாளான இன்று வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட்டுக்கு போட்டி அதிகரித்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் உனத்கட்.