காம்பீரை கைவிட்ட கொல்கத்தா... கைகொடுக்கமா சிஎஸ்கே??
ஐபிஎல் 11வது சீசனுக்காக அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் கவுதம் காம்பிர் கண்டுக்கொள்ளப்படாதது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தவர் காம்பீர்.
இதுவரை 131 ஆட்டங்களில், 3634 ரன்கள் குவித்து 31 முறை அரை சதம் அடித்துள்ளார் காம்பீர். மேலும், சிறந்த ஐபிஎல் கேப்டனாகவும் கருதப்படுகிறார். கோல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு முன் காம்பீர் டெல்லி அணிக்கு விளையாடினார்.
எனவே, காம்பீரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்குமா அல்லது டெல்லி அணி முந்திக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதில் சிஎஸ்கே அணி நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீரை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்கும் என்று வலுவாக உணர்கிறேன் என்று டிவிட்டர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ட்விட்டிற்கு ரீட்விட் செய்து சிஎஸ்கே அணி பரபரப்பை கூட்டியுள்ளது.
எனவே, காம்பீர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். ஆனால், இதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.