வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (09:19 IST)

ஐபிஎல் தொடருக்கான டைட்டில் உரிமையை தக்க வைத்தது டாடா: எத்தனை கோடி தெரியுமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் உரிமையை டாடா நிறுவனம் கைப்பற்றிய நிலையில் இந்த ஆண்டும் அந்த டைட்டிலை தக்க வைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான டைட்டில் உரிமையை டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டதாகவும் அதுமட்டுமின்றி 2028 ஆம் ஆண்டு வரை டைட்டில் உரிமை குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
எனவே இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் டாடா நிறுவனத்தின் பெயரில்தான் ஐபிஎல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்த ஐந்து சீசன்களுக்கு டைட்டில் உரிமையை பெற்றதற்காக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்று மொத்தம் 2500 கோடி ரூபாய் பிசிசிஐக்கு டாடா குழுமம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.  
 
இந்த டைட்டில் உரிமைக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனம் மற்றும் பிசிசிஐ அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran