வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (20:00 IST)

IND vs AFG- 3வது டி20: அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் இழந்து இந்தியா திணறல்

india -afganisthan
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன், விராட் கோலி டக் அவுட், சிவம் டுபே 1 ரன், சஞ்சு சாம்சன் 0 ரன்னுடன் அவுட்டாகினர்.

எனவே தற்போது ரோஹித் சர்மா 27 ரன்னுடனும், ரிங்கு சிங் 19 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.

துவக்க வீரர்கள் 4 பேரை இழந்து திணறல் ஆட்டம் ஆடி வரும் இந்திய அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் தரப்பில், அஹ்மது 3 விக்கெட்டும், ஓமர்ஷாய் 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.