வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (10:31 IST)

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்...!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில் இன்று முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. அதேபோல் நாளை எலிமினேட்டர் சுற்றில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. 
 
இதனை அடுத்து  மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி போட்டியை நரேந்திர மோடி மைதானத்தில் பார்க்க விரும்புகிற ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் விலை புக் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran