ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (18:07 IST)

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

tirupathi
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது என்பதும் தர்ம தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
http://www.tirupathibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பக்தர்கள் தங்களது டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran