திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

என்ன…! கோலி என் சாதனையை முறியடிச்சுட்டாரா?... நான் திரும்ப வர்றேன்- கிறிஸ் கெய்ல்!

ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 6 சதங்களோடு முன்னிலையில் இருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த சாதனையை இந்திய அணியின் கோலி முறியடித்தார். அவர் 7 சதங்கள் அடித்து முதலிடத்துக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி ஜாலியாக பேசியுள்ள யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் “யூனிவர்சல் பாஸின் சாதனையை கோலி முறியடித்துவிட்டார். அதனால் நான் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறேன்.  அடுத்த வருடம் அவரது சாதனையை முறியடிப்பேன்.” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.