சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (09:31 IST)

தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டாங்க… மொயின் அலி பாராட்டு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஐபிஎல் ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ளது. இன்று நடக்கும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கே அணி வேறுபடுவது எந்த புள்ளியில் என்பது பற்றி பேசியுள்ளார்.

அதில் “தோனி அளவுக்கு யாரும் வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது. மற்ற அணிகளில் இளம் வீரர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் அவரை உடனடியாக நீக்க முயற்சிப்பார்கள். ஆனால் தோனி அப்படி செய்யமாட்டார். அவர் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்ததைப் பெறுவார்.” எனக் கூறியுள்ளார்.