1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (08:14 IST)

தல" கைல கப் இருக்கணும், வீரமா மீசைய முறுக்கணும்: ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று நடைபெற்ற கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் சென்னை அணி வீர்ர்கள் தங்கள் கருத்துக்களை ஆவேசத்துடன் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹீர் டுவீட்டுக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
 
ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில், 'எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும்' என்று கூறியுள்ளார். 
 
அதேபோல் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில், ''போட்டி உனக்கும் எனக்கும்தான். இந்த மாணிக் பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்கும்தான். தேவை இல்லாம கடைசியில இருக்குற டீம்கிட்ட உன் வீரத்தை காட்டாதே. முடிக்கிறேன். எண்ணி 2 நாள்ல்ல உன்னை முடிக்கிறேன் குவாலிஃபையர்ல்ல. ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. எடுடா வண்டியை போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.
 
இந்த இரண்டு டுவீட்டுக்களுக்கும் சென்னை அணி ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். லைக்ஸ்களும், ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.