செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (14:55 IST)

IPL - கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு... பிசிசிஐ அறிவிப்பு !

IPL - கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு... ?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி இம்மாதம் 29ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் தற்போது திடீரென எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி இருக்கும் காரணத்தினால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில்,  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதனை அடுத்து ஆயிரக்கணக்கானோர் கூடும் ஐபிஎல் போட்டியைரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை தள்ளி வைப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல் மைதானத்தில் நடத்தலாம் என்றும், போட்டியை தொலைக்காட்சி மற்றும் செயலிகள் மூலம் ஒளிபரப்பு செய்யும் வகையில் போட்டியை நடத்தினால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நாளை நடக்கும் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களால் கொரோனா பரவும் அச்சம் காரணமாக, ஐபில் போட்டிகள் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.