இன்னொரு ஐபிஎல் வேண்டும் – சுனில் கவாஸ்கர சொல்லும் புதிய யோசனை !

Last Modified செவ்வாய், 10 மார்ச் 2020 (10:29 IST)

மகளிர் அணிக்கு மேலும் சிறந்த வீராங்கனைகளைத் தேர்வு செய்ய அவர்களுக்கும் ஐபிஎல் போல ஒரு தொடர் நடத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 20 உலகக்கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இழந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதலும், இறுதிப் போட்டி வரை சென்றதற்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

மகளிர் அணிக்கு மேலும் சிறந்த இளம் வீராங்கனைகளை கண்டெடுக்கும் முயற்சியாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் ‘மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தி சிறந்த வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தொடரை உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் ஆண்டுகளில் பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணிக்கு கிடைப்பது போல பல நல்ல வீராங்கனைகள் மகளிர் அணிக்கு கிடைப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :