வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (08:58 IST)

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை: ஐபிஎல் சேர்மன் தகவல்

புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் இருக்கும் இந்தியா, அந்நாட்டினுடான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. அந்த வகையில் உலகக்கோப்பை உள்பட எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற குரல் நாடெங்கும் ஒலித்து வருகிறது

இந்த நிலையில்  மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறிய ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, ' எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். விளையாட்டிற்கு எந்தவித வேறுபாடும் கிடையாதுதான். ஆனால் அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் பாதிக்கதான் செய்யும் என்பது தான் உண்மை.

உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் ஒருசில மாதங்கள் இருப்பதால் அப்போட்டியின்போது இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடுமா? என்பதை இப்போதே உறுதியாக கூறமுடியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்று சுக்லா மேலும் கூறினார்.