கார் ஓட்டி சவுதி இளவரசரை காக்கா பிடித்த இம்ரான் கான்: நெட்டிசன்கள் கிண்டல்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி இளவரசரை வரவேற்க பாகிஸ்தன அரசின் நடைமுறைகளை மீறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு இன்று பாகிஸ்தான் வந்தார். இளவரசரை வரவேற்க பாகிஸ்தான் நடைமுறைகல் ஒதுக்கிவிட்டு தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். குறிப்பாக காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் சவுதி அரசரை ஸ்பெஷ்லாக வரவேற்று உபசர்ப்பு நடத்தியுள்ளார் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சந்திப்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.